Close
பிப்ரவரி 23, 2025 4:34 மணி

நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஜேஇஇ தேர்வில் தேசிய சாதனை..!

ஜேஇஇ தேர்வில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ள, நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களை, டிஇஓ ஜோதி, பள்ளி சேர்மன் சரணவன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

நாமக்கல் :

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் அகில ஜேஇஇ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர்.

இந்தியாவில் தேசிய அளவிலான இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான ஜே.இ.இ. மெயின்ஸ் தேர்வுகள் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள், தேசிய தேர்வுகள் முகமை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வில் நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி பிளஸ் 2 மாணவர்களான மைலானந்தன், 99.91, நிரஞ்சன் 98.92, ஆரவ் 97.3மூ, நிகல் விக்னேஷ் 96.3, ஹாசினி 92.78 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர். இவர்கள் ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் இப்பள்ளி மாணவர்கள் ஸ்ரீகாந்த் வீரமலை, நவ்யா, ஸ்ரீனிவாஸ் வீரமலை, சுவாதிகா, கவின்குமார், நேத்ரா ஆகியோர் ஜேஇஇஇ மெயின்ஸ் தேர்வில் (அமர்வு-1) தேசிய அளவில் சாதனை படைத்து ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

இம்மாணவர்கள் ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி மற்றும் மத்திய நிதியுதவி பெறும் சி.எப்.டி.ஐ போன்ற முன்னணி இன்னினியரிங் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான முதல் நிலை வாய்ப்பை பெற்று, ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி, பள்ளி சேர்மன் சரவணன், பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top