விலை உயர்ந்த வாகனம்.. வாகனத்தை சுற்றிலும் குளிர்பான அலங்காரம் என தைப்பூச விழாவில் அசத்தும் முருகர் காட்சி..
செங்கல்பட்டு அடுத்த சிறுமையிலூர் கிராமத்தில் தைப்பூச விழா கோலாகலம்..
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் கடவுளாக கூறப்படும் முருகனுக்கு தைப்பூச விழா முருக பக்தர்களால் சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
அவ்வகையில் செங்கல்பட்டு மாவட்டம் சிறுமையிலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சண்முக பெருமான் திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவை வெட்டி முருகப்பெருமானுக்கு 94 ம் ஆண்டு மகா அபிஷேகமும் அன்று இரவு வீதி உலா விழா காட்சியும் நடைபெற்றது.
இதில் வித்தியாசமாக முருகப்பெருமானை விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் அமர வைத்து அதன் பின்புறம் பிரம்மாண்ட வளைவில் குளிர்பானங்களை வைத்து சிறப்பு வித்தியாச அலங்காரம் செய்யப்பட்டது.
அக்கிராமத்தில் உள்ள சிறுவர் முதல் இளைஞர்கள் வரை காவடி எடுத்தும் அலகு குத்தியும் அந்தரத்தில் தொங்கி முருகனுக்கு பூ மாலை சூட்டும் நிகழ்வுகளும் நடைபெற்று அனைவரும் இறையருள் பெற்றனர். வித்தியாச அலங்காரம் அனைவரையும் அதிசயப்படுத்தியது