Close
பிப்ரவரி 23, 2025 10:50 மணி

நிபந்தனை இன்றி அதிமுகவில் இணையத் தயார்: ஓபிஎஸ்..!

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்

எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் இணையத் தயாராக இருக்கிறோம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேனியில் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது:

”வரும் 2026 பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்தால் வாழ்வு, இல்ல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வே. செங்கோட்டையன் அதிமுகவுக்கு விசுவாசமானவர், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நினைப்பவர். அவர் மீது எங்களுக்கு எந்தவித அதிருப்தியும் இல்லை.

எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் இணையத் தயாராக இருக்கிறோம்.

அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் உரிமை கோர முடியாது. மற்றபடி எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கிறாரா என்பதற்கு செங்கோட்டையன் தான் பதில் சொல்ல வேண்டும்.” என்று பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top