Close
பிப்ரவரி 22, 2025 10:11 மணி

இந்தியாவுக்கு எஃப் 35 ரக விமானம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு..!

எஃப் 35 ஸ்டெல்த் போர் விமானம்

இந்தியாவிற்கு எஃப் 35 ரக விமானங்கள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமெரிக்கா – இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து டிரம்ப் பேசியதாவது:

இந்தாண்டு முதல் இந்தியாவுக்கு அதிகளவிலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்யவுள்ளோம். இந்தியாவுக்கு எஃப் 35 ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கவுள்ளோம். இந்தியாவின் எரிவாயு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்தவுள்ளோம்.

2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளின் வர்த்தக பரிவர்த்தனை 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதாவது 43.43 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். விரைவில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதை உறுதி செய்துள்ளோம்” என்றார்.

இந்தியா – சீனா, இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அதிநவீன எஃப் 35 ஸ்டெல்த் போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா அறிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top