Close
பிப்ரவரி 22, 2025 9:30 மணி

உலகத்தை அதிர வைத்த மோடி, எங்கு தங்கினார் தெரியுமா?

பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும்

பிரதமர் மோடி பிரான்ஸ் சென்ற போது, அந்த நாட்டில் மிகவும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் மீட்டிங் நடக்கும் போது பிரான்ஸ் அதிபர் அதுவரை சந்திக்காக தலைவர்களை மட்டும் கைகுலுக்கி வரவேற்றார்.

பிரதமர் மோடிக்கு ஏற்கனவே சிறப்பான வரவேற்பு கொடுத்திருந்ததால், அந்த இடத்தில் அவரை கடந்து சென்றார். அந்த நாட்டு அதிபர் தன்னை கடந்து செல்வதை கவனித்த மோடி அந்த இடத்தில் பிரான்ஸ் அதிபருக்கு உரிய மரியாதை கொடுத்தார்.

இந்த வீடியோவை இந்தியாவில் உள்ள சில விஷமிகள் பகிர்ந்து மோடிக்கு மரியாதை இல்லை. பாருங்கள்… என சிறிது நேரம் சந்தோஷப்பட்டுக் கொண்டனர். அவர்களின் முகத்தில் கரி பூசுவது போல், பிரான்ஸ் நாட்டின் மரபினையும் மீறி பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு வந்து அந்த நாட்டு அதிபர் வழியனுப்பி வைத்த வீடியோ சில நிமிடங்களில் பரவியது.

அமெரிக்காவில் பிரதமர் மோடி தங்கிய வெள்ளை மாளிகை எதிரே உள்ள ப்ளேர் ஹவுஸ்.

இது மோடியை விமர்சித்த அவரின் எதிர்ப்பாளர்களுக்கு வேப்பங்காய் போல் கசந்தது. நமது இந்தியாவின் பிரதமர் என்ற மரியாதை கூட தராமல் பிரதமர் மோடியை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அசிங்கப்படுத்த முடியுமா? அவமானப்படுத்த முடியுமா? என ஏங்கித்தவித்த அந்த விஷமிகளுக்கு இன்னொரு தகவல் இடியை இறக்கி உள்ளது.

ஆம். அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு கிடைத்த வரவேற்பு தான் இப்போது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது. பொதுவாக அமெரிக்கா செல்லும் வெளிநாட்டு தலைவர்கள் அங்குள்ள ஏதாவது நட்சத்திர ஓட்டலில் தங்குவது தான் வழக்கம்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு எதிரே உள்ள ப்ளார் ஹவுஸ்.. என்ற விருந்தினர் மாளிகையில் யாரும் தங்க வைக்கப்படுவதில்லை. இதுவரை இந்த ப்ளார் ஹவுசில் இங்கிலாந்து ராணி எலிசபெத், வின்ஸ்டன் சர்ச்சில், சார்ல்ஸ் டீ குவலா போன்ற சிலர் மட்டும் தங்கியுள்ளனர்.

இந்தமுறை மோடிஜி அமெரிக்காவில் இருந்த போது இந்த ப்ளார் ஹவுசில் தங்கினார். அமெரிக்க சரித்திரத்திலேயே.. முதன்முறையாக… ஒரு இந்திய பிரதமரை அவர்களது சரித்திரப் புகழ் வாய்ந்த ப்ளார் ஹவுசில் (Blair House) தங்க வைத்தது அமெரிக்க  டிரம்ப் அரசு.

மோடி அங்கிருந்த வரை அந்த ஹவுசில் அமெரிக்க கொடி இறக்கப்பட்டு இந்திய கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி அமர அமெரிக்க அதிபர் டிரம்ப் சேர் நகர்த்தி கொடுத்தார்.

இந்த வீடியோவும் உலக அளவில் வைரலாகி வருகிறது. மோடிக்கு டிரம்ப் குடுத்த பரிசு புத்தகத்தில் ‘பிரைம் மினிஸ்டர் யூர் ஆர் ஏ கிரேட்’ என தனது கைப்பட எழுதி கொடுத்தார். அதற்கு முன்னதாக மோடியை வரவேற்ற போது, ‘நான் உங்களை மிகவும் மிஸ் செய்தேன்’ என கூறி வரவேற்றார்.

வெள்ளைமாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் உலக தலைவர்கள் பிரதமர் மோடியை பின்பற்ற வேண்டும் எனவும் டிரம்ப் வெளிப்படையாக கூறினார். இந்த தகவல்கள்  அனைத்தும் இணையத்தில் வைரலாகி கலக்கி வருகின்றன. இது முழு உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

என்ன தான் எதிர்பாளர்கள் வசை பாடினாலும்… அவரை அசிங்கப்படுத்த நினைத்தாலும்…. மோடி தினம்… தினம் தன் பாதையில் தெளிவுடன் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார். பாரத நாட்டையும் முன்னேற்றி வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top