மதுரை:
அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, காலை 7:00 மணியளவில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியை, மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ வெங்கடேசன் , தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு பூமிநாதன் , மாவட்ட வருவாய் அலுவலர் நரேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி ஆகியோர் பார்வையிட்டனர்.
மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1030 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்றனர். களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளைகளை தழுவும் வீரர்களுக்கும் தங்ககாசு,சைக்கிள், மிக்ஸி, மெத்தை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.
பொது மக்கள் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் கண்டு ரசிக்க பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி தொகுத்து வழங்கினார். பொதுமக்களின் பொழுபோக்கு நிகழ்வாக ஜல்லிகட்டு போட்டி இடையே இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.