Close
பிப்ரவரி 22, 2025 7:51 மணி

பரமத்தியில் அந்தராஷ்டிரிய இந்து சேனா அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம்..!

பரமத்தியில் நடைபெற்ற அந்தராஷ்டிரிய இந்து சேனா அமைப்பின் கூட்டத்தில், மாநில தலைவர் சிதம்பரநாத சுவாமிகள் கலந்துகொண்டு, மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட ரவிச்சந்திரனுக்கு சான்றிதழ் வழங்கினார்.

நாமக்கல் :

பரமத்தியில் அந்தராஷ்டிரிய இந்து சேனா அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அகில இந்திய அளவில் அந்தராஷ்டிரிய இந்து சேனா அமைப்பு, இந்துக்கள் இடையே எழுச்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம், நாமக்கல் அருகே பரமத்தியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவரான, ஹரிதுவார் நால்வர் மடத்தின் மடாதிபதி சிதம்பரநாத சுவாமிகள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார்.

அப்போது இந்துக்களிடையே எழுச்சியை ஏற்படுத்திட அனைத்து இந்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில செயலாளராக ரவிச்சந்திரன் மற்றும் மாநில பொறுப்பாளாராக விக்னேஷ், மாநில பொருளாளராக சண்முகம், மாநில கொள்கை பரப்பு செயலாளராக கண்ணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டார்கள். கூட்டத்தில் அந்தராஷ்டிரிய இந்து சேனா அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top