மதுரை:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, அங்காள ஈஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் விலக்கில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரி அம்மன், நொண்டி கருப்பசாமி திருக்கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதில், கணபதி ஹோமத்துடன் முதற்கால யாகசாலை பூஜை,, இரண்டாம் காலை யாகசாலை பூஜை மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, அங்காள ஈஸ்வரி அம்மன் கோபுர கலசத்திற்கும் மற்றும் கருவறையில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு அர்ச்சகர் குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
அதைத் தொடர்ந்து ஈஸ்வரி அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் தீபா ராதாரணைகள் காட்டப்பட்டன.இதில்,
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்., அதனைத் தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.