என்ன செய்கிறார் பிரதமர் மோடி. இந்தியா ஏன் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது என்று பங்களாதேஷ் இந்துக்கள் அங்குள்ள இஸ்லாமியர்களால் தாக்கப்பட்ட போது அட்வைஸ் மழையா பொழிந்தவங்கல்லாம் இப்ப நடக்கும் விஷயத்தை கூர்ந்து கவனிங்க.
ஏற்கனவே சொன்ன மாதிரி நினைத்த உடனே இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களுக்குள் சென்று மூக்கை நுழைக்க முடியாது. அப்போது பங்களாதேசை முழுமையாக இயக்கி கொண்டிருந்தது அன்றைய அமெரிக்க அதிபர் ஜோபைடன்.
பைடன் கடைசி வரையிலும் இந்தியாவிற்கு எதிரான மனநிலை கொண்டவராகவே இருந்தார். அப்படி ஒரு நிலையில் இந்தியா போய் தலையிட்டு தன்மானம் இழந்து நிற்பது சரியல்ல.
இப்போது அதற்கான நேரம் கைகூடி வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பை பாரத பிரதமர் மோடி சந்தித்ததும் பத்திரிகையாளர் ட்ரம்ப்பிடம் பங்களாதேஷ் விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்று ஒரு கேள்வி வைக்கிறார்.
அதற்கு ட்ரம்ப் சொன்ன பதில் தான் உலகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. பங்களாதேஷ் விவகாரத்தை நான் பிரதமர் மோடியிடம் விட்டு விட்டேன் என்று மிக எளிதாக பதில் சொல்லி கடந்து விட்டார். ஆனால் அதன் பின்னால் ஒழிந்திருக்கும் விஷயங்கள் பல. பங்களாதேஷுக்கும் பாரதத்திற்கும் இடையே அது உருவான நாள் முதலே பலமான அரசியல் உறவு நிலவி கொண்டிருக்கிறது.
எனவே, பங்களாதேஷ் விஷயத்தை இந்தியாவால் மட்டுமே சரியாக கையாள முடியும் என ட்ரம்ப் சொல்லாமல் சொல்லி விட்டார். மேலும் பங்களாதேஷ் மீது இந்தியா எடுக்கும் எந்த ஒரு முடிவிற்கும் அமெரிக்கா தடையாக நிற்காது. ஒத்துழைப்பு கொடுக்கும் என்பது தான் அதன் மறை பொருள்.
ஆக இனி வரும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பங்களாதேஷ் குடுமி பாரதத்தின் கையில். இதற்கு மேலே என்ன வேணும்? இனி யூனுஸ்சின் நாட்கள் எண்ணப்படும். உலகின் வல்லரசு நாடு ஒரு மிகப்பெரிய விஷயத்தை கையாளும் பொறுப்பை ஜஸ்ட் லைக் தேட் இந்திய பிரதமரிடம் தூக்கி கொடுக்கிறது என்றால் நம் பிரதமரின் தகுதியும் பாரதத்தின் வளர்ச்சியும் அவர்களுக்கு இணையாக இருக்கிறது என்று தானே அர்த்தம். இந்த சந்திப்பின் போது நடந்த ஒரு சம்பவத்தை சொல்லியே ஆக வேண்டும்.
ஒரு வல்லரசின் அதிபரான டிரம்ப் பாரத பிரதமர் அமர இருக்கையை அவரே தன் கையால் இழுத்து தன் அருகே போட்டு கொண்டார். டிரம்ப் இப்படியான செயல்களை செய்பவரே அல்ல. இதனை அங்குள்ள ஊடகங்கள் சிலாகித்து செய்தி வெளியிட்டு கொண்டிருக்கின்றன.
ஒரு காலத்தில் நுழைய தடை விதிக்கப்பட்ட இடத்தில் இப்படி கம்பீரமும் மரியாதையுமாக போய் அமர்வது நிஜமாகவே கெத்துதான் …
நன்றி: பகிர்வு, திருநாவுக்கரசு, தலைவர், தேசிய சிந்தனை பேரவை.