மதுரை:
தமிழ்நாடு முதலமைச்சர் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயல்பாடுகளுக்காக சென்னையில் இருந்து காணொளி வாயிலாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே டைடல் பூங்கா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், டைடல் பூங்காவை பணிகளை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா , மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் ,சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன்( மதுரை தெற்கு ), மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.