Close
ஏப்ரல் 16, 2025 7:18 மணி

நாமக்கல் பகுதியில் புதிய வழித்தடங்களில் விரைவில் மினி பஸ் இயக்கம் : கலெக்டர் ஆய்வு..!

பேளுக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதிய வழித்தடத்தில் மினி பஸ் இயக்குவது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் :

நாமக்கல் பகுதியில் புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்குவது குறித்து, கலெக்டர் உமா காரில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.

போக்குவரத்து துறை சார்பில் நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்ட் முதல், புதன்சந்தை வரை 24.04 கி.மீ., தூரத்திற்கு, அரியாகவுண்டம்பட்டி, பச்சுடையாம்பாளையம், ஈச்சம்பட்டி, கல்குறிச்சி, பேளுக்குறிச்சி, எடையாம்பட்டி, திருமலைப்பட்டி, பாலப்பட்டி, களங்காணி பிரிவு வரை புதிய வழித்தடத்தில் மினி பஸ் இயக்கப்படுகிறது.

மேலும், புதன்சந்தை முதல், புத்தூர் பிரிவு, வேலகவுண்டம்பட்டி வரை, 15 கி.மீ., தூரத்திற்கு, புதன்சந்தை, அண்ணாநகர், உடுப்பம், கொளத்துபாளையம், பொம்மகுட்டைமேடு பிரிவு, காதப்பள்ளி பிரிவு, முசிறி, புத்தூர் வரை புதிய வழித்தடத்தில் மினி பஸ் இயக்கப்படுகிறது.

அதையடுத்து, கலெக்டர் உமா, பஸ்கள் இயக்கப்பட உள்ள வழித்தடத்தில், பேளுக்குறிச்சி முதல் புதன்சந்தை வரை 14 கி.மீ., புதன்சந்தை முதல் புத்தூர் பிரிவு வேலகவுண்டம்பட்டி வரை 15 கி.மீ., என மொத்தம் 29 கி.மீ., தூரத்திற்கு காரில் பயணம் செய்து, அது பொதுமக்களுக்கு பயனுள்ள வழித்தடமா என்பது குறித்து நேரடியாக ஆய்வு செய்தார்.

முன்னதாக, நாமக்கல் ஒன்றியம், வீசாணம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்க உள்ள பஞ்சாயத்து தொடக்கப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top