இந்தியாவில் முதன் முதலாக ஆந்திராவில் தனியார் தங்க சுரங்கம் அமைகிறது.
இந்தியாவில் மணல், கல், உட்பட பல்வேறு கனிம வளங்கள் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதில் தனியார்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் செய்வதாகவும், கோர்ட் மூலம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்து கொண்டுள்ளன. இப்படி கனிமவளங்கள் சூறையாடப்படுவது தெரிந்தும் இதுவரை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக மக்களுக்கு தகவல்கள் சென்று சேரவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் முதன் முறையாக ஆந்திர மாநிலத்தில் தனியார் தங்கச்சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கடந்த 1994ம் ஆண்டு கண்டறிந்தது. பெங்களூரை சேர்ந்த ஜியோ மைசூர் சர்வீசஸ் லிமிடெட் ஜொன்னகிரி மண்டலத்தில் ஆய்வு செய்ய உரிமம் பெற்றது.
3 மாதங்களுக்குள் தங்கம் வெட்டி எடுக்கும் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இப்பகுதியில் இருந்து ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்க முடியும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.