வாடிப்பட்டி:
தோல்வி என்பதில் கூட விடாமுயற்சி வெற்றி தரும் என்ற பொருள் உள்ளது என்று, ஸ்டோன் டு டைமன் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் நடிகர் அஜய்ரத்தினம் பேசினார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளங்கோ முத்தமிழ்மன்றம் சார்பாக இலக்கிய மன்றவிழா, 100சதவிகிதம் வருகை பதிவுசெய்த மாணவிகளுக்கு பரிசளிப்புவிழா, பள்ளி வளாகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை தாங்கினார். மன்றச் செயலாளர் ஒய்வு பெற்றதமிழாசிரியர் புலவர் சங்கரலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் ஜெ.சி.பி.ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழாசிரியர் ராணி வரவேற்றார்.
இந்த இலக்கிய மன்றவிழாவில், கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசுவழங்கிய திரைப்படநடிகர் அஜய்ரத்தினம் பேசியதாவது.- ஒவ்வொரு மாணவர்களும் எளிமையாக கவனமாக, புன்னகையோடு இருந்தால் எளிதாக வெற்றி கிடைக்கும் சிறியவிதைதான் விருச்சத்தை உருவாக்கும் அதுபோல் சின்ன அனல்பொறி காட்டுதீயாய் மாறும். எய்ம் என்பதன் பொருள் ஆம்பிசன் இன் மைன்டு என்பதாகும் குறிக்கோளை சிந்தையில் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளவேண்டும் என்பதை போல் வாய்ப்பு வரும்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அர்ச்சனையை சந்திக்காத பிள்ளையாரும் இல்லை பிரச்சனையை சந்திக்காத மனிதர்களும் இல்லை எல்லோருக்கு பிரச்சனை இருக்கத்தான் செய்யும் அதை கண்டு நாம் பயந்துவிடக்கூடாது.
எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளவேண்டும் துன்பத்தை கண்டு துவண்டுவிடக்
கூடாது எதிர்த்து நின்று போராடவேண்டும் மாற்றம் ஒன்றுதான் உலகில் நிரந்தரமானது அந்த மாற்றத்திற்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். கோபம் கொள்வதை கைவிடவேண்டும் லிசன் என்ற ஆங்கில வார்த்தைக்குள் சைலன்ஸ் என்ற அமைதி அடங்கியுள்ளது. அமைதியாக கவனித்தால் கடுமையான
விசயத்தை கூட எளிமையாக்கி விடுவான் அதிபுத்திசாலி என்றார்,தாமஸ்ஆல்வாய் எடிசன்.
பெற்றோர்கள்,பெரியவர்கள் சொல்கேட்டு நடந்தால் எதிலும் வெற்றிபெறலாம். உலகிலேயே சிறந்த மனிதர்யார் என்றால் ஆசிரியர்கள்தான். குரு இல்லாதவித்தை குருட்டுவித்தையாகும் நேற்று என்பது நடந்துமுடிந்தது நடந்ததை எண்ணி கவலை கொள்ளகூடாது.
நாளை என்பது புதிரானது இன்று மட்டும்தான் உண்மையானது இன்று நல்லதை விதைத்தால் நாளை நல்லபலன்தரும். ஏந்த ஒரு செயலிலும் ஒரு காரணம் உள்ளது காரணம் இல்லாமல் எதுவும் நடக்காது. எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்படுத்தவேண்டும்.
அதை தான் ஆங்கிலத்தில் பிளான் பிரிபரேசன் புஸ் பெர்பாம்ஸ் என்பார்கள் அதாவது திட்டமிட்டு தயாராகி உந்துதலோடு செயலாற்றவேண்டும் என்பதாகும். மேலும் சொல்லித்தருவதை படித்துஎழுதுவதை காட்டிலும் கூடுதலாக தனித்துவத்துடன் தனிதிறமையை வெளிபடுத்தும் மாணவனாய் இருக்கவேண்டும்.
தோல்வி என்பதி;ல்கூடவிடாமுயற்சிவெற்றிதரும் என்றபொருள் உள்ளது. அதேபோல் எண்டு என்றால் எபர்ட்நெவர்டைய்ஸ் அதாவது முயற்சி என்றும் சாகாது என்பதாகும்; இவ்வாறுஅவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கண்ணதாசன் இலக்கியப்பேரவை தலைவர் பொன்கலைதாசன், இளங்கோமுத்தமிழ்மன்ற ஆலோசகர் தங்கராஜ், உடற் கல்வி ஆசிரியர் சந்திரமோகன் உள்படட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், உதவித்தலைமை ஆசிரியர் பிரேமா நன்றி கூறினார்.