Close
பிப்ரவரி 22, 2025 6:26 மணி

அலைபேசி பயன்பாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் : விழிப்புணர்வு கருத்தரங்கு..!

செல்போன் பயன்பாடுகளால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி கிரட் குடும்ப ஆலோசனை மையத்துடன் சமூகப்பணி களப் பயிற்சி மாணவர்கள் இணைந்து அலைப்பேசியின் பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

இந்த கருத்தரங்கிற்கு, கிரட் செயலாளர் வழக்கறிஞர் அழகேசன் தலைமை தாங்கினார். குடும்ப ஆலோசனை மைய ஆலோசகர் முனைவர் கன்மணி முன்னிலை வகித்தார். மதுரை சமூக அறிவியல் கல்லூரி மாணவி ஸ்வேதா வசித் வரவேற்றார். இந்த கருத்தரங்கில், மதுரை ஒருங்கிணைந்த சேவை மையம் அலுவலக நிர்வாகி டயானா பெண்களின் பாதுகாப்பு அவசர உதவி எண்கள் 181 , பெண்கள் உதவி எண்,1098 குழந்தைகள் உதவி எண் ஆகியவற்றை பயன்படுத்தும் முறை பற்றி விளக்கிப் பேசினார்.

சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர்கள் சுதாசெல்வி, மாரீஸ்வரி , வாடிப்பட்டி காவல் நிலைய தலைமை எழுத்தர் நாகராஜன் ஆகியோர் அலைபேசி மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்தசட்டங்கள் பற்றியும், குடும்ப ஆலோசனை மையத்தின் ஆலோசகர் காசிவிஸ்வநாதன் ஆகியோர்
இன்றைய காலத்தில் அலைப்பேசியின் அளவில்லா பயன்பாடு மற்றும் அதன் விளைவாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், மனநல பாதிப்புகள், குடும்ப உறவுகளின் மாறுபட்ட நிலைமைகள் குறித்தம், மேலும், நடத்தை ஆலோசனையின் முக்கியத்துவம் மற்றும் இதை சமாளிக்க தேவையான வழிமுறைகள் பற்றியும் விளக்கி பேசினர்.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள்கலந்து கொண்டனர். முடிவில், அமெரிக்கன் கல்லூரி சமூகவியல் மாணவர்கள சந்தோஷ் குருஜித் நன்றி கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top