Close
பிப்ரவரி 22, 2025 9:39 மணி

விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் : விவசாயிகள் சங்கம் கோரிக்கை..!

தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி.

நாமக்கல் :

விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், விளைநிலங்களின் பாசன வசதிக்காக, விவசாய மின் மோட்டார்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டது. தற்போது விவசாயத்திற்கு 24 மணிநேரமும், மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை.

இதனால் விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் கருகி சேதமாகி வருகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில், தமிழகம் முழுவதும் விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top