நாமக்கல் :
மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.
ரோலர் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆஃப் இந்தியா சார்பில், மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டிகள், கீரம்பூர் நவோதயா அகாடமி பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி கவிஸ்னா, 12வயதுக்கு உட்பட்டோர் ஸ்கேட்டிங் பிரிவில் கலந்துகொண்டு, சிறப்பாக விளையாடி மாவட்ட அளவில் 2ம் இடம் பெற்றார்.
நாமக்கல்லில் மற்றொரு தனியார் பள்ளியில் நடைபெற்ற, மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் குறிஞ்சி பள்ளி மாணவி கவிஸ்னா கலந்துகொண்டு, மாவட்ட அளவில் 2ம் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஸ்கேட்டிங் விளையாட்டுப்போட்டியில் சாதனை படைத்த மாணவி கவிஸ்னாவுக்கு குறிஞ்சி கல்வி நிறுவனங்களின் தாளாளர் தங்கவேல், இயக்குனர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.