Close
பிப்ரவரி 24, 2025 9:23 மணி

நாமக்கல் அதிமுக சின்னம்மா பாசறை சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்..!

நாமக்கல்லில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில், அதிமுக சின்னம்மா பாசறை மாவட்ட செயலாளர் மனோகரன், பொதுமக்களுக்கு கேக் வழங்கினார்.

நாமக்கல் :

நாமக்கல்லில் அதிமுக சின்னம்மா பாசறை சார்பில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்ட அதிமுக சின்னம்மா பாசறை சார்பில், மறைந்த முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா, நாமக்கல் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

பாசறை மாவட்ட செயலாளர் மனோகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பாசறையின் நாமக்கல் நகர செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் பரமேஸ்வரி, ராகவன், இளங்கோவன், புண்ணியதேவன், ஆறுமுகம், சிவகுமார், கணேசன், மதுமதி, ராஜேஸ்வரி, பூமணி, சாந்தி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top