Close
பிப்ரவரி 24, 2025 10:23 மணி

பல ஆண்டு பட்டா வழங்காததால் கண்ணீர் மல்க ஆட்சியரிடம் தெரிவித்த பெண்மணி…!

பட்டாவுக்கு கண்னீர் சிந்திய பெண்மணி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

அவ்வகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறைகளில் தீர்வு காண அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார்.

வழக்கமாக இக்கூட்டத்திற்கு வரும் அனைவரையும் ஆண் மற்றும் பெண் காவலர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்வதை கண்காணிக்கும் வகையில் சோதனையிட்ட பின்னே உள்ளே அனுமதிக்கப்படுவர்.

அப்போது உத்திரமேரூர் வட்டம் திருவானைக்கோயில் பகுதியை சேர்ந்த குட்டியம்மாள் என்ற பெண்மணி ஆச்சேரி மனுவுடன் சந்திக்க வந்தபோது அவரை பெண் காவலர்கள் சோதித்த போது கையில் வைத்திருந்த பையில் மண்ணெண்ணெய் கேன் வைத்திருந்தார். உடனடியாக அதனை பறிமுதல் செய்து எச்சரித்து விசாரணை மேற்கொண்டு அதன் பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க நேரில் அழைத்து சென்றனர்.

அப்போது அந்தப் பெண்மணி மாவட்ட ஆட்சியரிடம், கடந்த 25 ஆண்டுகளாக அப்பகுதியில் வேறு ஒரு நபர் வைத்திருந்த இடத்தை பணம் செலுத்தி வாங்கி அதன்பின் வீட்டு வரி , மின்சார இணைப்பு போன்றவற்றை முறையாக பெற்று நத்தம் பகுதியில் வீடு கட்டி வசித்து வந்தேன்.

அதற்கான சர்வே எண் 67/76ல் வசித்து வந்த நிலையில் பட்டா கேட்டபோது அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபருக்கு அரசு வழங்கியுள்ளது.

எனவே என்னுடைய மனுவை விசாரணை செய்து வீடு கட்டி வசித்து வரும் எனக்கு அதனை மாற்றி தர வேண்டுமென கண்ணீர் மல்க ஆட்சியரிடம் தெரிவித்தார்.

இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு காணப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top