Close
ஏப்ரல் 22, 2025 6:15 காலை

கலர் கலரா.. தர்பூசணி..! அள்ளிச்சென்ற சுற்றுப்புற கிராம மக்கள்…!

விவசாயி அறுவடை செய்யாததால் இலவசமாக தர்பூசணிகளை அள்ளிச் செல்லும் பொதுமக்கள்

விற்பனை விலை குறைந்ததால் விவசாயி விட்டு சென்றாரா? எது எப்படி இருந்தாலும் இலவசமாக கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் பொதுமக்கள்

தர்பூசணி என்பது ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் வெளிப்புறத் தோல் பச்சை, மஞ்சள் ஆரஞ்சு என பல வகைகளில் உற்பத்தி ஆகிறது.

பொதுவாகவே விவசாயிகளின் நெல் கரும்பிற்க்கு அடுத்தபடியாக களிமண் மற்றும் ஆற்று மணல் பகுதி கொண்ட நிலங்கள் அதிக அளவில் தமிழகத்தில் விவசாயமாக மேற்கொள்ளப்படுகிறது.

கோடை காலத்தில் இந்த தர்பூசணி பழம் உடல் வெப்பத்தையும் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களையும் அளிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்திரமேரூர் வட்டத்தில் வெங்கச்சேரி ஆதவப்பாக்கம் மலையாங்குளம் வாடாத ஊர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தர்பூசணியை விவசாயமாக மேற்கொண்டு தற்போது கோடை காலம் துவங்கப்பட்டுள்ளதால் தர்ப்பூசணி அறுவடை தொடங்கியுள்ளது.

முதல் முறை அறுவடை செய்யும் பழங்கள் ஐந்து முதல் 12 கிலோ எடையுள்ள பழங்கள் ஒரு டன் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும். இரண்டாவது முறை விற்பனை செய்யும் பழம் எட்டாயிரம் முதல் ஒன்பதாயிரம் வரை விற்பனை செய்யலாம்.
மூன்றாம் முறை அறுவடை செய்யும் பழங்களின் விலை மிக குறைவாக இருக்கும்.

இந்த நிலையில் உத்தரமேரூர் வட்டம் வாடாதவூர் பகுதியில் பாண்டிச்சேரி சேர்ந்த விவசாயி ஒருவர் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பச்சை மஞ்சள் ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களை உடைய பழங்களை பயிரிட்டு வந்துள்ளார்.

இந்த விளைநிலங்களில் உள்ள பயிர்களை பாதுகாக்க வடமாநில தொழிலாளர்கள் பணி நியமித்து உள்ளார். கடந்த வாரம் முதல் அறுவடையை முடித்து பழங்களை கோயம்பேடுக்கு அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் விளைநிலங்களில் உள்ள விளைந்த தர்பூசணிகளை அள்ளிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்து இன்று மாலை 3 மணி வரையில் ஏராளமான இருசக்கர வாகனங்களில் வந்த வாலிபர்கள் பொதுமக்கள் என பலரும் மூட்டை மூட்டையாக பழங்களை அள்ளி செல்லும் காட்சியும், விளைநிலங்களில் அப்படியே நல்ல நிலையில் உள்ள பழங்களும் காணப்படுகிறது.

இதுகுறித்து விசாரித்த போது , ஏற்கனவே முதல் அறுவடை செய்து விற்பனை செய்ய சென்றபோது போதிய விலை கிடைக்காதது பெருத்த ஏமாற்றும் அடித்த நிலையில், மீண்டும் அறுவடை செய்தால் அறுவடை கூலி மற்றும் விவசாயம் செய்த பணம் ஏதும் அவருடைய நிலைக்கு கிடைத்திருக்காது என்பதால் இதை விட்டிருக்கலாம், அல்லது அப்பகுதி பொதுமக்கள் ஏதேனும் கேட்டதுக்கு தர மறுத்திருந்தால் இது போன்ற ஒரு சிலர் செய்ய அனைவரும் இதனை சாதகமாக பயன்படுத்தி அறுத்து சென்றிருக்கலாம் என தெரிவித்தார்.

70 நாள் காத்திருந்து விவசாயம் செய்யும் விளை பொருட்களின் விலை கிடைக்காத நிலையில் விவசாயிகளின் நிலை ? மேலும் பொதுமக்கள் இவரின் நிலையை உணர்ந்தாவது எடுத்துச் சென்ற பொருட்களின் சந்தை விலையை விட குறைத்துக் கொடுத்து இருந்தால் கூட அவருடைய செலவுக்கு ஓரளவு நட்டத்தை ஏற்படுத்தி இருக்காது.

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது எனும் பழமொழி கூறுவது போல் இந்த விவசாயின் நிலை ஏற்பட்டுள்ளதா என மற்ற விவசாயிகளை அச்ச பட வைத்துள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top