சாம்சங் தொழிலாளர் பிரச்சினையில் ஏழாவது முறையான பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு உடன்பாடு ஏற்படவில்லை எனவும் நாளை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தொழிற்சாலை உணவு மற்றும் பாதுகாப்பு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் என சிஐடியு அறிவிப்பு..
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ளது சாம்சங் இந்தியா நிறுவனம். இங்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தொழிற்சாலை சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சுமார் 18 ஊழியர்கள் இதுவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொழிற்சாலை ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அன்று முதல் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் தற்போது காஞ்சிபுரம் அடுத்த வெள்ளை கேட் பகுதியில் உள்ள இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் ஆறு கட்ட பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டாத நிலையில் இன்று 12:00 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை துவங்கியது.
இதில் சிஐடியு சார்பில் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சாலை சார்பில் நிர்வாகிகள் என இரு தரப்பினரும் கலந்து கொண்ட நிலையில் எந்த சமூகம் தீர்வு காணப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்க தலைவர் முத்துக்குமார் வெளியிட்ட அறிக்கையில், பேச்சுவார்த்தையில் தொழிற்சாலை நிர்வாகம் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருவதாகவும் இதனால் சுமுகத்தேர்வு ஏற்படவில்லை என்பதால் நாளை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை உணவு மற்றும் பாதுகாப்பு துறை அலுவலகத்தில், சாம்சங் நிர்வாகத்தில் நடைபெறும் சட்டவிரோத உற்பத்தி மீது அவசர நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.