சோழவந்தான் :
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு . சோழவந்தான்பேட்டை 1வது வார்டு செயலாளர் முத்துக்குமார் தலைமையில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம் பென்சில் பேனா, ஆகியவை வழங்கப்பட்டன. தொடர்ந்து மரக்கன்று நடப்பட்டது. பேரூர் செயலாளர் முருகேசன் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், நகர இளைஞரணி செயலாளர் ஜே சி பி சுரேஷ், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் வெல்டிங் மாரி, மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் வைகை ராஜா, குருவித்துறை ஜெயக்குமார் முன்னாள் சேர்மன் முருகேசன், சபரிமலை, துரைக்கண்ணன், இளைஞரணி மாவட்ட இனைச் செயலாளர் கேபிள் மணி, பெரியாம்பிள்ளை ரகுபதி, சிவா உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.