Close
மார்ச் 4, 2025 3:11 காலை

அழிந்து போ என்று சொல்பவர்களே அழிந்துபோவார்கள் : திமுக பேச்சாளர் புகழேந்தி பேச்சு..!

திமுக தலைமைக்கழக பேச்சாளர் புகழேந்தி பேசுகிறார்.

அண்ணாமலை, சீமான் அதனைத் தொடர்ந்து விஜய் என அனைவரும் திமுகவை அழித்து விடுவேன் என கூறினாலும் அவர்கள் தான் அழிந்து வருகிறார்கள் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி பேச்சு.

மார்ச் ஒன்றாம் தேதி தமிழக முதல்வரும் திமுகவின் தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் திமுகவினரால் பொதுக் கூட்டங்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானங்கள் என சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக காஞ்சி மாநகரத்தின் நான்காவது பகுதி கழகத்தின் சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவிலிமேடு பள்ளிக்கூட தெருவில் பகுதி கழக செயலாளர் வெங்கடேசன் வரவேற்புரை உடன் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் , காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் தலைமைக் கழக பேச்சாளருமான நெல்லிக்குப்பம் புகழேந்தி, மேயர் மகாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசுகையில், தமிழகத்தில் திமுகவை அழித்து விடுவதாக அண்ணாமலை அவரைத் தொடர்ந்து கற்பழிப்பு நாயகன் சீமான், சமீபத்தில் திரையிலிருந்து அரசியலுக்கு வந்த நடிகர் விஜய் என அனைவரும் திமுகவை அழித்து விடுவோம் ஒழித்து விடுவோம் என கூறி வருகின்ற நிலையில் அவர்கள் தான் தற்போது அழிந்து வருகின்றனர்.

திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்பது உண்மை என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் , மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ் பகுதி துணை செயலாளர் வடமலை மற்றும் பகுதி கழக செயலாளர் திலகர், தசரதன், மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top