தமிழகத்தில் பல்வேறு பகுதியில் பட்டியலின மக்கள் மீது வன்கொடுமை, கொலை, கொள்ளைகள் நாள் தோறும் அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் சாதிய வன்கொடுமை தீண்டாமை மற்றும் சாதிய ஆணவ படுகொலையை தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடந்தது.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மக்கள் தேசம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சிலம்பு தலைமையில் 100க்கு மேற்பட்ட மக்கள் தேசிய கட்சியினர் தமிழக அரசு கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.