மதுரை:
மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில், சுவாதி நட்சத்திரம் நரசிம்மர், தேய்பிறை பஞ்சமி யை முன்னிட்டு வராஹியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ங்கள் நடைபெற்றது.
மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் உள்ள நரசிம்மர், சக்கரத்தாழ்வார், பாலமுருகன், வராஹி அம்மனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகமும், அர்ச்சணைகள் வழிபாடுகளும் நடைபெற்றன.
முன்னதாக, சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், வராஹியம்மன் சன்னதி முன்பாக சிறப்பு ஹோமங்கங்கள், பூர்ணாகுதி, அர்ச்சணைகள் நடைபெற்றது.
நரசிம்ம ருக்கு பானகமும், வராஹியம்மன், பால முருகனுக்கு பிரசாதங்கள் படைக்கப்பட்டன. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு, வராஹி, நரசிம்மரை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஆன்மீக பெண்கள் பக்தர்கள் குழுவினர் செய்து இருந்தனர்.