உசிலம்பட்டி:
தமிழக வெற்றி கழகத்தின் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு வந்த தவெக மாவட்ட செயலாளருக்கு கிரைன் மூலம் 21 அடி உயர மாலை அணிவித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாவட்டச்செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை தவெக தலைவர் விஜய் அறிவித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த எஸ்.ஓ.பி. விஜய் மகாலிங்கம் என்பவருக்கு, தமிழக வெற்றி கழகத்தின் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராகவும், இணைச் செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை நியமித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தவெக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், பொறுப்பேற்ற நிர்வாகிகள் சென்னையில் தவெக தலைவர் விஜய்-யை சந்தித்து விட்டு சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு வந்த மாவட்ட செயலாளர் விஜய் மகாலிங்கத்திற்கு செக்காணூரணியிலிருந்து வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ச்சியாக, உசிலம்பட்டி மலையாண்டி தியேட்டர் முன்பு பட்டாசு வெடித்து, மேல தாளங்கள் முழங்க கிரைன் மூலம் 21 அடி உயரத்தில் மாலை கொண்டு வந்து அணிவித்து வரவேற்றனர்.
தொடர்ந்து, மாவட்ட செயலாளர் விஜய் மகாலிங்கம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை, பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் தொண்டர்கள் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.