Close
மார்ச் 19, 2025 11:53 காலை

காஞ்சியில் 5 தாலுகாவில் 95 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு..!

காஞ்சிபுரம் அடுத்த கீழ்பெரமல்லூர் பகுதியில் அரசின் நேரடி மேல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து சட்டமன்ற உறுப்பினர் நெல் ஈரப்பதம் ஆய்வு செய்தார்.

விவசாயம் மாவட்டம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் தவிர மற்ற மூன்று தாலுக்காகளான உத்திரமேரூர், வாலாஜாபாத் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் நவரை பருவத்தில் நெல் விவசாயிகளால் பயிரிடப்பட்டது.

போதிய நீர் இருப்பு அனைத்து நீர்நிலைகளில் இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நவரைப் பருவத்தில் பயிரிட்டு தற்போது அறுவடை துவங்கியுள்ளது.

தமிழக அரசு சார்பில் விவசாயிகள் இடமிருந்து நேரடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதால் மகிழ்ச்சி வரும் நேரடி என் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

அவ்வகையில் தற்போது நபரை பருவத்திற்காக நுகர் பொருள் வாணிபக் கழக மண்டலம் சார்பில் காஞ்சிபுர வட்டத்தில் 28 இடங்களிலும், வாலாஜாபாத் வட்டத்தில் 17 இடங்களிலும், உத்திரமேரூர் வட்டத்தில் 43 இடங்களிலும், ஸ்ரீபெரும்புதூரில் நான்கு இடங்களிலும், குன்றத்தூர் வட்டத்தில் மூன்று இடங்கள் என மொத்தம் 95 இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது.

அவ்வகையில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ் பெரமநல்லூர் பகுதியில் அமைக்கப்பட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் திறந்து வைத்து விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யும் பணியினை துவக்கி வைத்தார்.

மேலும் அரசு விதிகளுக்கு உட்பட்டு ஈரப்பதம் இருக்க வேண்டும் எனவும் முறைகேடுகளை தவிர்த்து அரசுக்கு நல்ல பெயரை பெற்று தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் தற்போது ஏ கிரேட் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ2320 மற்றும் ஊக்கத் தொகையாக ரூ130 என மொத்தம் ரூ2450, பொது ரக நெல்லுக்கு ரூபாய் 2405 வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்வில் நுகர்பொருள் வாணிபக் கழக கொள்முதல் அலுவலர் முருகையன், திமுக ஒன்றிய செயலாளர் குமணன், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய முகவர் அசோகன், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top