Close
ஏப்ரல் 1, 2025 1:22 காலை

தமிழகத்திலும் உடனடியாக சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறார் ஓ பி சி கூட்டமைப்பு மத்திய மண்டல செயலாளர் மூ.சரவணதேவா.

புதுக்கோட்டை: பீகார் உள்ளிட்ட மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் உடனடியாக சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு வலியுறுத்தல்.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்ற மாவட்ட  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு பி சி கூட்டமைப்பு மத்திய மண்டல செயலாளர் மூ.சரவணதேவா தலைமை வகித்தார்.

முக்குலத்தோர் சமூகம் வழக்கறிஞர் நாகதேவன், பார்க்கவ குல உடையார் சமூகம்  மாவட்டத் தலைவர் வேலவேந்தன், யாதவர் சமூகம் திலக்  வீரபாண்டியன், எம்பி இளங்கோவன்,  அனைத்து வெள்ளாளர் வேளாளர் சமூகம் நிலாமணியன், வீர சைவ சமூகம் நாராயணன், முத்தரையர் சமூகம் இராம சுரேஷ் வர்மன், அனைத்து செட்டியார் சமூக நலச் சங்கம் ஆலங்குடி கணேசன், திருப்பதி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 சிறப்பு விருந்தினர்களாக  பார்க்கவ குல உடையார் சங்க மாநில செயலாளர் ஆனந்த் மாணிக்கம், கள்ளர் எழுச்சி பேரவை தலைவர் ஒரத்தநாடு மூவேந்தர் செல்வராஜ், யாதவர் எழுச்சி பேரவை தலைவர் எம் சி கே சின்னத்தம்பி, யாதவ்அனைத்து அகமுடையார் கூட்டமைப்பு மாவட்ட பொறுப்பாளர் எஸ் பி ஆறுமுகம்,  நாயுடு சங்க தலைவர் வி கே சுந்தர்ராஜன், மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் (குலாலர்) தலைவர்  சௌந்தர்ராஜன், ஆவுடையார் கோவில் பால சுப்பிரமணியம், ஊராளி கவுண்டர் சமூகம் செல்வம் தர்மலிங்கம், மருத்துவர் சமூகம் ஹரி, சலவை தொழிலாளர்கள் சமூகம் திருநாவுக்கரசு, கள்ளர் எழுச்சி பேரவை ராமச்சந்திரன், வீர சைவ பேரவை செயல் தலைவர் ஜெயராஜ், முத்திரையர் சமூக நிர்வாகிகள் ராணுவ ஓய்வு பாளையன்,ஆலங்குடி ஜெயக்குமார்  மற்றும் ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக பாலமுருகன் முதலியார் அனைவரையும் வரவேற்று பேசினார்.வீர சைவ பேரவை கலாவதி முத்துக்கருப்பன் நன்றி கூறினார்.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியாகசெயல்பட்டு வந்ததை  மீண்டும் அறிவிக்க வேண்டுமென ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன

2.காவேரி வைகை இணைப்பு திட்டத்திற்கு போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து இப்ப பணியை விரைவு படுத்தவேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது  வலியுறுத்துகிறது

3 புதுக்கோட்டை மாநகராட்சியில்நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியினை விரைந்து முடிக்க வேண்டும்

4 தமிழகத்திலே மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ள புதுக்கோட்டையில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை உருவாக்குகின்ற வகையில் அரசு சார்ந்த தொழிற்சாலையை உருவாக்கிட வேண்டும்

5.எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லி குறை சொல்லி தப்பிப்பதை விட பீகார் உள்ளிட்ட மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் உடனடியாக சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

6.பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் மேனால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் சமூக நீதிக் காவலர் ஆணைக்கிணங்க ஓ பி சி கூட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் அதிகப்படியான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது.

7.புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஓ பி சி மக்களுக்கான விழிப்புணர்வு பிரசாரக் கூட்டத்தை ஆங்காங்கே நடத்துவது.

8.நமது அமைப்பால் நடத்தக்கூடிய இணைய வழி அறிவுத்திறன் போட்டிக்கு நமது இளைஞர்கள் இளம்பெண்கள் மற்றும் மாணவர்களை அதிகப்படியாக கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

(பட விளக்கம்- புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்ற மாவட்ட  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறார் ஓ பி சி கூட்டமைப்பு மத்திய மண்டல செயலாளர் மூ.சரவணதேவா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top