Close
ஏப்ரல் 1, 2025 6:19 காலை

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் திரண்டு வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!

வீட்டுமனை பட்டா கேட்டு திரண்ட பொதுமக்கள்

காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தில் நத்தம் புறம்போக்கு வகையிலான சுமார் 20 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தினை இக்கிராமத்தில் வசித்து வரும் ஏழைமக்கள்,இந்து ஆதிதிராவிடர்கள் அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்படி இந்த 20 ஏக்கர் அரசு நிலத்தில் கீழம்பி கிராமத்தை சாராத, வெளியூர் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தேசித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இது குறுத்தான ஆட்சேபணையை தெரிவிக்கும் பொருட்டு, இக்கிராம மக்கள் ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ள நிலையில்,கிராம மக்களின் ஆட்சேபணையை கருத்தில் கொள்ளாமல், தற்போது ஜேசிபி இயந்திரம் மூலம் மேற்படி இடத்தை சீரமைத்து, வெளியூர் நபர்களுக்கு பட்டா வழங்க ஆயத்தப்பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது கீழம்பி கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து இன்று கீழம்பி கிராமத்தை சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிய கவுன்சிலர் விமல்ராஜ் தலைமையில்,மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திடீரென திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் பின்பு மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ்-யை நேரில் சந்தித்து தங்களது,கிராமத்திலேயே தகுதி வாய்ந்த,ஏழை, இந்து ஆதிதிராவிடர், வீடில்லா உள்ள மக்கள் ஏராளமான பொது மக்களுக்கு மேற்படியான அரசு நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குமாறு கோரிக்கை மனுவினை அளித்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலரும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் கீழம்பி கிராம மக்கள் அனைவரும் கலைந்துச் சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top