Close
ஏப்ரல் 1, 2025 6:22 மணி

மாணவிகளுக்கு அளவெடுக்க ஆண் டைலர்கள் : தனியார் பள்ளிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தள்ளு முள்ளு..!

போராட்டம் நடத்திய பெண்களை கைதுசெய்ய முயற்சி செய்த போலீசார்.

மதுரை.

தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு சீருடைக்காக ஆண் டெய்லர் மூலமாக அளவீடு செய்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி , மாணவர் சங்கம் மற்றும் மாதர் சங்கத்தினர் போராட்டம் செய்தனர். கைது செய்யப்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆண் டெய்லர் மூலமாக கட்டாயப்படுத்தி அளவெடுக்க வைத்ததாக பள்ளி ஆசிரியை மற்றும் டெய்லர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டடுள்ளது. இந்த நிலையில், அவர்களை கைது செய்யக் கோரியும், இனி ஆண் டெய்லர்கள் பயன்படுத்தக் கூடாது,

பள்ளி நிர்வகித்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்கள் சங்கம், மற்றும் மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top