Close
ஏப்ரல் 1, 2025 7:59 மணி

காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி புனரமைப்பு : கலெக்டர் துவக்கி வைப்பு..!

நீர் மேலாண்மை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி புணரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.

நீர் மேலாண்மை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி புனரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.

1 கோடி மதிப்பீட்டிலான இயந்திரத்தினை இப்பணிக்காக இலவசமாக கோமோட்சு இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி , திருக்காலிமேடு நேதாஜி நகர் பகுதியில் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது அல்லாபாத் ஏரி.

பல வருடங்களாகவே இந்த ஏரி புனரமைக்கப்படாமல் ஒரு செயற்கையான காடாகவே இந்த ஏரி மாறி உள்ளது.

இந்த நிலையில் நீர் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்காக இதனை மாற்றும் முயற்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் மற்றும் கோமாட்சு இந்தியா நிறுவனம் இணைந்து இந்த ஏரி புனரமைப்பு பணியில் ஈடுபட முடிவு செய்தது.

இதற்காக கோமாட்சு இந்தியா நிறுவனம் சுமார் ஒரு கோடி மதிப்பீட்டிலான அதிநவீன ஜேசிபி இயந்திரனை வழங்கி உதவியுள்ளது.

இதன் துவக்கவிழா நிகழ்ச்சி அப்பகுதியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, கோமாட்சு இந்தியா நிறுவன மூத்த மேலாளர் நட்சுக்கிதகஹாஷி , எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் தலைவர் செந்தூர் பாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இப்பணியினை துவக்கி வைத்த ஆட்சியர் கலைச்செல்வியிடம், ஜேசிபி இயந்திரத்தின் சாவியை அளித்து பணிகளை துவக்கி வைத்தார்.

நீண்ட காலமாக இந்த ஏரியை உணர வைக்க வேண்டும் எனவும் அதில் உலவும் மான்களை பத்திரமாக வனத்துறையினர் பிடித்து காடுகளில் விட வேண்டும் எனவும் பலமுறை கோரிக்கை இருந்த நிலையில் தற்போது மட்டுமே இதற்கு விடிவு கிடைத்துள்ளது.

மேலும் ஒரு சிறப்பாக இந்த ஜேசிபி இயந்திரத்தினை ஒரு பெண் ஒருவர் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் சந்துரு, சுரேஷ், புனிதா , சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மேகநாதன், மோகன் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top