Close
ஏப்ரல் 7, 2025 2:05 காலை

பச்சையப்பன் மகளிர் கல்லூரிக்கு சொந்தச்செலவில் பேவர் பிளாக் : அமைச்சர் காந்தி தாராளம்..!

பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் பாதை திறப்பு விழாவில் அமைச்சர் காந்தி

பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் சொந்த செலவில் ரூபாய் 32 லட்ச மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைத்து தந்த தமிழக கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி செயல் வரவேற்பை பெற்றுள்ளது.

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான பச்சையப்பன் மகளிர் கல்லூரி காஞ்சிபுரத்தில் 1967 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

இக்கல்லூரியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் பல்வேறு பாடப்பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசின் புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்ச்சிக்கு கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கல்லூரிக்கு வருகை புரிந்தார்.

அப்போது அக்கல்லூரி நிர்வாகம் சார்பில் பேவர் பிளாக் சாலை அமைத்துத் தர அமைச்சருக்கு கோரிக்கை வைத்தனர். தனியார் கல்லூரி என்பதால் அரசு நிதியை ஒதுக்கீடு செய்ய இயலாத நிலையில் தனது சொந்த பணத்தில் ரூ 32 லட்சம் மதிப்பில் அமைத்து தருவதாக உறுதியளித்தார்.

 

இதனைத் தொடர்ந்து 240 மீட்டர் தூரத்திற்கு பேவர் பிளாக் காலை அமைக்கப்பட்டு அதன் இருபுறமும் விலகாத வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இன்று இதனை மாணவிகள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து , மாணவிகளுக்கு சிறப்பான கல்வி கற்க தற்போது சிறந்த சூழ்நிலை நிலவுவதாகவும் அதனை பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் எம்.பி செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன், கல்லூரி முதல்வர் கோமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top