காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தின் கீழ் மூன்று அலுவலகங்களில் மின் நுகர்வோர் பொதுமக்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது
முகாமினை சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் மற்றும் எழிலரசன் ஆய்வு மேற்கொண்டனர்
தமிழக முழுவதும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில் , மின் கட்டண தொடர்பானது, பழுதடைந்த மின் மீட்டர், பழுதடைந்த மின் கம்பம் மாற்றம் , குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் நேரடியாக காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை புகார்கள் தெரிவிக்கலாம் எனவும் அறிவித்தது.
அவ்வகையில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் , ஒலிமுகமது பேட்டையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சன்னதி தெருவில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில் இன்று மின் நுகர்வோர் குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
அவ்வகையில் ஒலிமுகமது பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முதன்மை பொறியாளர் எஸ். ராமசந்திரன் தலைமையில் முகாம் நடைபெற்றது.
இதில் பல்வேறு கிராம ஊராட்சிகள் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் புதிய மின்கம்பங்கள் மற்றும் சாலைக்கு இடையூறாக இருக்கும் மின் கம்பங்களை மாற்ற மனு அளித்தனர். இதேபோல் பொதுமக்கள் விவசாய நில மின் இணைப்பு தொடர்பான குறை மனுக்களை அளித்தனர்.
இந்நிலையில் முகாமினை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் முகாமினை ஆய்வு மேற்கொண்டு, மனுக்கள் மீது உரிய நேரத்தில் தீர்வு காண அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
இந்த முகாமில் கோட்ட பொறியாளர் செல்வம், பொறியாளர் கண்ணன் , உதவி செயற் பொறியாளர்கள் இளையராஜா, பாஸ்கரன், இளங்குமரன் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.