சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் சாலையின் இருபுறங்களிலும் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது.
இந்த பள்ளங்களை சரிவர மூடாதால் நேற்று பெய்த கனமழையின் காரணமாக சாலையின் இருபுறத்திலும் மழை நீர் தேங்கி சேரும் சகதியமாக காணப்பட்டது இதில் அந்த வழியாக வந்த கதிர் அடிக்கும் இயந்திரம் மாட்டிக் கொண்டது.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, டிராக்டர் மூலம் கதிர் அடிக்கும் இயந்திரம் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
பள்ளங்கள் அதிக அளவில் இருப்பதால் கடந்த ஒரு வார காலமாக அரசு பேருந்துகள் ஊத்துக்குளி கிராமத்திற்கு வருவது கிடையாது இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி விசாரணை செய்து ரோட்டை சரி செய்ய வேண்டும் என்றும் மழைநீரால் பாதிப்பு ஏற்படா வண்ணம் சாலை சீரமைக்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.