பூமிக்கு அடியில் உள்ள கிணற்றிலிருந்து நீர் இருக்கும் பணி விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் அத்தி வரதர் புகழ்பெற்ற வரதராஜர் பெருமாள் திருக்கோயில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றானது சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் நடாவி உற்சவம்.
சித்ரா பௌர்ணமி முன்னாள் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு செவிலிமேடு பாலாறு வழியாக பல்வேறு கிராமங்களுக்கு சென்று ஏப்ரல் 13ம் தேதி ஞாயிறு அன்று நடாவி கிணற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.
அவ்வகையில் ஐயங்கார் குளம் கிராமத்தில் உள்ள சஞ்சீவராயர் திருக்கோவிலுக்கு மதியம் எழுந்தருளும் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த பின் நடாவிக்கிணற்றுக்கு செல்வார்.
இந்த நடாவைக் கிணறு பூமிக்கு அடியில் அமைந்துள்ள ஒரு கல் மண்டபம் ஆகும். அங்கு பெருமாள் இறங்கி திருக்குளத்தை மூன்று முறை வலம் வந்து மீண்டும் அதிலிருந்து வெளியேறி பாலாற்றில் நடைபெறும் சிறப்பு திருமணஞ்சத்திற்கு சென்று அதன் பின் அதிகாலை தேசிகர் கோயிலில் சிறப்பு மரியாதை செய்த பின் மீண்டும் திருக்கோயிலை அடைவார்.
இந்நிலையில் அந்த நடாவி கிணறு என்பது தொடர் மழையின் காரணமாக முழுமையாக நிரம்பி உள்ள நிலையில் அதிலுள்ள நீரை வெளியேற்றி அதனை சுத்தம் செய்யும் பணி தற்போது அக்கிராம விழா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரண்டு ராட்சத மோட்டார் மூலம் நீர் தற்போது வெளியேறிய பின், சென்னையைச் சேர்ந்த உழவாரப் பணிக்குழுவினர் முழுவதுமாக இந்த கல் மண்டபத்தினை தூய்மை செய்து மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட மாவிலை தோரணங்கள் கட்டி விழாவிற்காக அழகு படுத்துதல் பணிகளைச் செய்வர்.
மேலும் விழா ஐயங்கார் குளம் கிராமத்தில் சிறப்பு அன்னதான நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நாள் முழுவதும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.