Close
ஏப்ரல் 16, 2025 5:00 காலை

மதுரை அரசு மருத்துவமனைக்கு ரூ.17 லட்சம் மதிப்புள்ள நவீன மருத்துவ கருவி வழங்கல்..!

நவீன புற்றுநோய் சிகிச்சைக்கருவி வழங்கப்பட்டது

மதுரை:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, பரவை மீனாட்சி ஜி எச் .சி .எல் .சமூகப்பணி அறக்கட்டளை சார்பாக மதுரை ரோட்டரி கிளப்புடன் இணைந்து ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் நவீன நுண் கதிர்வீச்சு புற்றுநோயை கண்டறியும் படக் கருவியும் மின் கலன் மின்சார சேமிப்பு கருவியும் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், ஜி. எச். சி. எல். தலைமை நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி, மருத்துவமனை டீன் அருளிடம், வழங்கினார். ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, மதுரை வடக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஹரிஹரன், புற்றுநோய் துறை தலைவர் ரமேஷ், மலையரசன் சதீஷ் உட்பட கலர் கலந்து கொண்டனர்.

முடிவில்,சமூக பொறுப்பு அலுவலர் சுஜின் தர்மராஜன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top