Close
ஏப்ரல் 16, 2025 4:16 காலை

வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்தில் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை முகாம்..!

தேமுதிக உறுப்பினர் சேர்க்கை முகாம்

சோழவந்தான்:

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் தேமுதிக சார்பாக வட்ட பிள்ளையார் கோவிலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. சோழவந்தான் பேரூர் செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சோலை சசிகுமார், மாவட்ட அவைத் தலைவர் நல் கர்ணன் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி துணைச் செயலாளர் கண்ணம்மா,

பூங்கொடி, பாண்டிச்செல்வி, சிறப்பு அழைப்பாளராக மாவட்ட நிர்வாகி தெய்வேந்திரன், முள்ளி பள்ளம் கிளை செயலாளர் மாணிக்கம் ,ராமதாஸ் ,ஈஸ்வரன், பேரூர் நிர்வாகிகள் துணைச் செயலாளர் கோபால், பேரூர் அவைத் தலைவர் ஜெய வீரன், மனோகரன் கண்ணன், முருகன், அழகர், இளைஞரணி ஜெயச்சந்திரன், செல்லப்பாண்டி, கண்ணன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top