Close
ஏப்ரல் 16, 2025 1:59 மணி

தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை..!

தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை - விவசாயம் செழிக்க வேண்டி 51 பொங்கலிடப்பட்டது

தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை – விவசாயம் செழிக்க வேண்டி 51 பொங்கலிடப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த, அகஸ்தியரும் தேதையரும் மூலிகை ஆராய்ச்சி செய்ததாக கூறப்படும் பிரசித்திபெற்ற தோரணமலை முருகன் கோவிலில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மலைமேல் அமைந்துள்ள தோரணமலை முருகனுக்கு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

தொடர்ந்து மலை அடிவாரத்தில் உற்சவமூர்த்திகளுக்கு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது, தமிழ் புத்தாண்டு தினத்தில் விவசாயம் செழிக்க வேண்டி கோவில் வளாகத்தில் 51 பானைகளில் பொங்கலிடப்பட்டது.

மேலும் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை காப்பாற்றி வரும் விவசாயிகளை கௌரவிக்கும் விதமாக தோரணமடையான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து பள்ளி கும்மி பாட்டு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கடையம், மாதாபுரம், தென்காசி, ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top