லோக் ஆயுக்தா என்றால் என்ன?
லோக் ஆயுக்தா என்பது ஒரு சுயாதீன விசாரணை அமைப்பு. இது, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அல்லது அரசியல் பதவியில் உள்ளவர்கள் ஊழல் செய்தால், அவர்களுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிக்க வசதி அளிக்கிறது.
எப்போது புகார் அளிக்கலாம்?
ஒருவர் அரசு ஊழியராக இருந்தபோது,ஊழல் தடுப்பு சட்டம், 1988 -ன் கீழ் தண்டனைக்குரிய ஊழல் போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார் என்ற நம்பிக்கையுடன்,அவருக்கு எதிராக தகவல், சாட்சியங்கள் இருந்தால்,அவருக்கு எதிராக தமிழ்நாடு லோக் ஆயுக்தாவிடம் புகார் அளிக்கலாம்.
யாருக்கு எதிராக புகார் அளிக்கலாம்?
அமைச்சர்கள், முதலமைச்சர், அரசு துறை அதிகாரிகள், நகராட்சி, மாவட்ட வளர்ச்சி அலுவலர்கள்,பொது துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், சட்டப்படி பதவியில் உள்ள எந்தவொரு அரசு ஊழியருக்கும் புகார் அளிக்கலாம்.(இவை அனைத்தும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், பிரிவு 12-ன் கீழ் வருகிறது.)
யாருக்கு எதிராக புகார் அளிக்க முடியாது?
பிரிவு 13-இன் கீழ் சில சிறப்பு அதிகாரிகளுக்கு எதிராக, சட்டம் கூடிய தடை விதிக்கிறது.4 ஆண்டுகளுக்கு மேல் பழைய தவறுகள் குறித்த புகார்களை பரிசீலிக்க முடியாது.(தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், பிரிவு 40)
எப்படி புகார் அளிப்பது?
படிவம்: “அட்டவணை V” எனப்படும் குறிப்பிட்ட படிவத்தில் உங்கள் புகாரை எழுத வேண்டும்.பதிவிறக்கம் செய்ய: Form Download – tamilnadulokayukta.tn.gov.in/documents/forms
விதி: இது தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்ட விதிகள், 2018 – விதி 22ன் கீழ் வருகிறது.புகார் எழுதியவரின் விபரங்கள், புகாரின் விவரங்கள், ஆதாரங்கள், சாட்சிகள் ஆகியவற்றுடன்,தபால் / நேரில் / ஆன்லைன் வாயிலாக புகார் அளிக்கலாம்.
முக்கிய குறிப்புகள்:
புகாரில் உண்மை தகவல்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும்.தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கம், அல்லது பொய் புகார் இருந்தால், அது சட்ட ரீதியாக தண்டிக்கப்படக்கூடியது.
உதவி தேவைப்பட்டால், tamilnadulokayukta.tn.gov.in இணையதளத்தில் மேலும் பார்க்கலாம்.உங்கள் உரிமையை அறிந்து செயல்படுங்கள். ஊழலை ஒழிக்க ஒவ்வொருவரும் முன்னெடுக்கலாம்!