தென்காசி அருகே ரேஷன் கடைக்கு பொருள் வாங்க வந்தவர் தலை துண்டித்து கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
தென்காசி அருகே குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்பு ரத்தை படத்தைச் சேர்ந்தவர் குத்தாலிங்கம்(32). ரெடிமேட் கடை நடத்தி வந்த இவர் தனது மனைவியுடன் தென்காசியை அடுத்துள்ள கீழப்புலியூரில் வசித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரத்தில் பட்டு ராஜா என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து இவருக்கும் இவரது சகோதரர் ஆனந்த் என்பவருக்கும் கொலை மிரட்டல் இருந்து வந்தது.
இதனால் பாதுகாப்பு கருதி காசிமேஜர்புரத்தில் இருந்து கீழப்புலியூர் வந்து வசித்து வந்தார்.
இந்நிலையில் கீழப்புலியூர் உச்சி மாரியம்மன் கோவில் மூன்றாவது தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு நேற்று தனது மனைவியுடன் பொருள்கள் வாங்க வந்திருந்தார் அப்போது பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலையாளிகள் தலையை எடுத்துக்கொண்டு காசி மேஜர் புரத்தில் பட்டு ராஜா கொலை செய்யப்பட்ட இடத்தில் வைத்துவிட்டு தப்பிவிட்டனர்.
தலை மற்றும் உடலை கைப்பற்றி போலீசார் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பழிக்கு பழியாக நடந்த இந்த கொலை தொடர்பாக தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்