சோழவந்தான் :
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
கடந்த வாரம் காப்புக் கட்டுதளுடன் பக்தர்கள் பொதுமக்கள் மற்றும் பெண்கள் விரதத்தை தொடங்கினர் நேற்று முன்தினம் காலை பால்குடமும் மாலை அக்னிச்சட்டியும் வைகை ஆற்றில் இருந்து எடுத்து ஊர்வலமாக வந்து சந்தன மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து நேற்று இரவு 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக வந்தனர். பின்பு முளைப்பாரியை வைத்து கும்மி பாட்டு பாடினர். சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சந்தன மாரியம்மன் கோவில் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.