தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மேலாண்மை இயக்குனர் குணசேகரன் காஞ்சிபுரம் ஓரிக்கை பேருந்து புதுப்பித்தல் பிரிவில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக போக்குவரத்து துறை பொதுமக்களின் பொது போக்குவரத்துக்காக பேருந்துகளை பல்வேறு கோட்டங்களிலிருந்து இயக்கி வருகிறது.
மேலும் தற்போது பல ஆண்டுகளாக இருக்கும் பழைய பேருந்துகளை, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும், பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் புதிய பேருந்துகளை மாற்றி செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது செயல்பாட்டில் உள்ள பேருந்துகளின் பல்வேறு குறைபாடுகளை உடனுக்குடன் களைய போக்குவரத்து துறை அறிவுறுத்தியதின் பேரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து விழுப்புரம் மேலாண்மை இயக்குனர் குணசேகரன் இன்று காஞ்சிபுரம் ஓரிக்கையில் அமைந்துள்ள பேருந்து கட்டுமான பணிமனையினை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அவ்வகையில் புதுப்பித்தல் பிரிவில் ஆய்வின் மேற்கொண்ட மேலாண்மை இயக்குனர் அங்கு செய்யப்படும் பணிகள் குறித்து முதுநிலை உதவி பொறியாளர் கருணாகரனிடம் கேட்டறிந்தார். மேலும் அப்பகுதி மிகவும் தூய்மையாக இருப்பதைக் கண்டு தமிழகத்திலேயே இது போன்று தூய்மையான பகுதி கண்டதில்லை என முதுநிலை உதவிபொறியாளர் கருணாகரன் மற்றும் ஊழியர்களையும் வெகுவாக பாராட்டினார்.
மேலும் பணிமனையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்த ஊழியர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் தட்சிணாமூர்த்தி, பொது கூட்டாண்மை மேலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட போக்குவரத்துறை அலுவலர்கள் ஊழியர்கள் என பல உடனிருந்தனர்