சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிப்படையக்கூடிய ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏகனாபுரத்தை மையப்படுத்தி நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் 1000-வது நாளை எட்டியுள்ளது.
இன்று 1000வது நாள் போராட்டத்தை ஒட்டி பூவுலகு நண்பர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையில் ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்,
பெண்கள் முன்னெடுக்கும் போராட்டம் எந்த விதத்தில் தோல்வி கண்டதில்லை எனவும் வெற்றியே கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்கள் அவர்கள் வாழ்வாதாரத்துக்கான போராட்டம் அல்ல, சென்னையை காப்பாற்றக்கூடிய போராட்டம்,
மேலும் ஆளுகின்ற ஆட்சி திராவிட மாடல் வளர்ச்சி திட்டத்தை உறுதிப்படுத்தக்கூடிய போராட்டம்,
பெங்களூர், ஹைதராபாத் போன்ற விமான நிலையம் போன்று பரந்தூர் விமான நிலையம் அமைந்தால் தமிழகத்தில் உள்ள மற்ற விமான நிலையங்களின் வளர்ச்சி தடுக்கக்கூடிய திட்டம் என தெரிவித்தார்.