Close
ஏப்ரல் 22, 2025 12:45 காலை

புத்தர் பண்பாட்டு மையம் : புத்தகரம் கிராமத்தில் அமைக்க கலெக்டரிடம் மனு..!

புத்தர் பண்பாட்டு மையம் அமைக்க கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது

தமிழக சட்டமன்ற கூட்டத்தில், சுற்றுலா துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் புத்தகரம் கிராமத்திலேயே அமைக்க வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்..

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் புத்தகரம் கிராமத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலில் இருந்த 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இப்பகுப்பில் புத்த மதம் அதிக அளவில் இருந்ததாக கூறப்படுவதால் அப்பகுதியில் புத்த விகார் எனும் புத்த பண்பாட்டு மையம் அமைக்கும் வேண்டுமென கிராம பொதுமக்கள் உள்ளிட்ட புத்த பிக்குகள் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்போது மாவட்ட ஆட்சியரான ஆர்த்தி மற்றும் சுற்றுலாத்துறை செயலாளர் உள்ளிட்டூர் அப்பகுதியில் ஆய்வு செய்து 20 ஏக்கர் நிலம் உள்ளதால் அப்பகுதி புத்த பண்பாட்டு மையம் அமைக்க ஏதுவாக இருக்கும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்த பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதனால் புத்தகரம் கிராம பொதுமக்கள் இதுபோன்ற மையம் அமையும் நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயரும் என மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், புத்தகரம் கிராமத்தில் புத்தர் பண்பாட்டு மையம் அமைக்க தேவையான இடம் இருப்பதாகவும், அதை விரிவு செய்யும் நிலையில் அதற்கும் இடம் உள்ளதால் அக்கிராமத்திலேயே புத்தர் பண்பாட்டு மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசுகையில், கடந்த பல வருடங்களாக பெருமாள் கோயிலில் புத்தர் சிலை வைக்கப்பட்டு பொதுமக்களால் வழிபட்டு வரும் நிலையில் இப்பகுதி சிறந்த இடமாக அமையும் எனவும், அருகிலேயே நான்கு மற்றும் ஆறு வழி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதால் மாமல்லபுரத்திற்கு வரும் பயணிகளும் இங்கு வர வாய்ப்பு உள்ளதால் கிராம மக்களின் வாழ்வாதாரம் உயரும் எனும் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்ததாக தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top