தென்காசி மாவட்டம் தென்காசி மவுண்ட் ரோடு பகுதியில் மத நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் வக்பு போர்டு தலைவர் ஹைதர் அலி,தென்காசி நகர மன்ற தலைவர் சாதிர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விவசாய அணி மாநில செயலாளர் முகமது அலி,விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து பேசிய வன்னியரசு, தற்போது விஜய் மற்றும் சீமான் பல்வேறு ஜமாத்தார்களை சந்தித்து இந்த சட்டத்திற்கு எதிராக நாங்களும் இருக்கிறோம் என்று கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் இந்த சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் எதிராக இரண்டாவது விடுதலைப் போராட்டத்தை நாம் ஆரம்பித்து உள்ளோம். திப்பு சுல்தானின் வாரிசுகளான நாம் நிச்சயம் வென்றெடுப்போம் என்று அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில் தென்காசி பகுதியில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.