புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு சீனு.சின்னப்பா இலக்கிய விருதுகள் பட்டியல் (20.4.2025) ஞாயிறு அன்று அவரது நினைவு சதுக்கத்தில் வெளியிடப்பட்டது.
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு சீனு. சின்னப்பா இலக்கிய விருதுகள்- 2025 அண்மையில் அறிவிக்கப்பட்டன.
10 பிரிவுகளில் நூல்கள் பெறப்பட்டன. அதில் ஒவ்வொரு பிரிவிலும் 200-க்கும் மேற்பட்ட நூல்கள் வந்திருந்தன. அதில் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்ட விருது பெறும் படைப்புகள் மற்றும் விருது பெறும் படைப்பாளர்கள் பட்டியலை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி வெளியிட்டார்.
நாவல் பிரிவில் எழுத்தாளர் செஞ்சி தமிழினியன் எழுதிய “ஊத்தாம் பல்லா”.
மரபு கவிதைப்பிரிவில் கவிச்சித்தர் பி.கே.பெரியசாமி எழுதிய “சமநீதித் தந்தை வள்ளலார்”.
ஹைக்கூக் கவிதை பிரிவில் கவிஞர் ரகுநாத் வ எழுதிய “யானையின் தும்பிக்கையும் புத்தரின் கரமும்”.
கட்டுரை பிரிவில் கவிஞர், எழுத்தாளர் இளம்பிறை எழுதிய “அரங்க வெளியில் பெண்கள்”.
மொழிப்பெயர்ப்புப் பிரிவில் எழுத்தாளர் க.மாரியப்பன் மொழிபெயர்த்த “கருமிளகுக் கொடி”.
சிறுகதை பிரிவில் எழுத்தாளர் சிவசெல்வி செல்லமுத்து எழுதிய “நெல்கூட்டி”.
புதுக்கவிதைப் பிரிவில் கவிஞர் கௌ.ஆனந்தபிரபு எழுதிய “கனலெரியும் வேய்ங்குழல்”.
சிறார் இலக்கியம் பிரிவில் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவரணன் எழுதிய “எலியின் வேட்டை”.
கட்டுரைப்பிரிவில் எழுத்தாளர் ஜோதி கணேசன் எழுதிய “டாலர் நகரம் 2.0”.
சிறந்த சிற்றிதழ் பிரிவில், கவிஞர் வதிலைபிரபா ஆசிரியராக நடத்தும் “மகாகவி”.
விருது முடிவுகள் அறிவிக்கும் நிகழ்வு புதுக்கோட்டை அருகேயுள்ள பெருங்கொண்டான் விடுதியில் உள்ள “அறமனச்செம்மல்” சீனு.சின்னப்பா நினைவிடத்தில் எழுத்தாளர், பேச்சாளர், பாரதி கிருஷ்ண குமார் தலைமையில் அருண் சின்னப்பா முன்னிலையில் கவிஞர் நா.முத்துநிலவன் முடிவுகளை அறிவித்தார்.
விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் விருதும், தலா ரூ.10 ஆயிரம், ரொக்கத்தை உள்ளடக்கிய பத்து பிரிவுகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1லட்சம் ரொக்க பரிசுகளை 1.5.2025 அன்று மாலை மஹாராஜ் மஹாலில் நடைபெறும், விருதுகள் வழங்கும் விழாவில் மாண்பமை நீதி அரசர் ஆர்.சுரேஷ்குமார் விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறார்.
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி, செயலாளர் மகா.சுந்தர் மற்றும் தமிழ்ச்சங்க பொறுப்பாளர்கள், விருது தேர்வுக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.