ஆந்திர மாநிலத்தில் வழங்குவதுபோல் மாற்றுத்திறனாளிகள் மாத உதவி தொகை உயர்த்தி வழங்க கோரி கோட்டை முன்பு முற்றுகைப் போராட்ட நடத்த சென்ற 21 மாற்றுத் திறனாளிகள் காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் மாற்று திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் ஆந்திர மாநிலத்தில் வழங்குவது போல் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மையை பொருத்து மாத உதவி தொகை வழங்குவது போல் தமிழகத்திலும் வழங்க கோரி இன்று மாற்றுத்திறனாளிகள் பல சங்கத்தின் சார்பில் கோட்டை முன்பு மாபெரும் தொடர் முற்றுகை போராட்டம் நடைபெற அறிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வகையில் இன்று காஞ்சிபுரத்தில் இருந்து இன்று சென்னை போராட்டத்தில் புறப்பட்டு செல்ல முயன்ற 21 நபர்களை காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே காவல்துறையினர் கைது செய்து தனியா திருமணம் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
இதேபோல் பேருந்து நிலையம் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்திற்கு செல்ல முயல்பவர்களை கைது செய்ய காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினர் கூறுகையில், ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுடைய ஊனத்தின் தன்மையை பொறுத்து மாத உதவித்தொகை ரூபாய் 6000 முதல் 10 ஆயிரம் வரை வழங்குவது போல் தமிழகத்தில் வழங்க கோரி பல்வேறு மனுக்கள் கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில் அதனை அரசு ஏற்காமல் உள்ளதை கண்டித்து இன்று நடைபெறும் முற்றுகை போராட்டத்திற்கு செல்ல முயன்ற தங்களை கைது செய்தது கண்டனத்துக்கு உரியது என தெரிவித்தனர்