Close
ஏப்ரல் 22, 2025 5:43 மணி

உசிலம்பட்டியில் ஆட்டுக்கிடா முட்டும் போட்டி..!

ஆட்டுக்கிடா முட்டும் போட்டி

உசிலம்பட்டி:

உசிலம்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு,ஆட்டுக் கிடா முட்டும் போட்டி, வெகுவிமர்சையாக நடைபெற்றது .

46 ஜோடி கிடாக்கள் நேருக்கு நேராக ஆக்ரோசமாக மோதிக் கொண்டனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கோடாங்கி நாயக்கன்பட்டியில் அமைந்துள்ள அகோர ஆண்டி சித்தர் கோவிலின் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு, கிடா முட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 46 ஜோடி கிடாக்கள் பங்கேற்று ஆக்ரோசமாக மோதிக் கொண்டனர். குரும்பை, வெள்ளைமறை, செவளைமறை, கொங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான கிடாக்களை நேருக்கு நேர் மோத விட்டு அதிகமுறை மோதிக் கொள்ளும் கிடாக்களுக்கு சிறப்பு பரிசாக பித்தளை அண்டா மற்றும் போட்டியில் பங்கேற்ற கிடாக்களுக்கு சில்வர் அண்டா, சேர் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன.

இப்போட்டியை, உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கிடா முட்டை கண்டு ரசித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top