வாடிப்பட்டி :
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 4-ம் ஆண்டு மாணவி க.லட்சுமிகணேஷ்வரி , கிராம தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு கத்தரி செடியில் வேப்ப எண்ணெய் தெளிப்பு குறித்து விளக்கம் அளித்தார்.
சோப்புத்தூளை ஒரு சிறிய அளவு (10 மில்லி) நீரில் கரைத்து அந்த சோப்புநீரில் 30 மில்லி வேப்பெண்ணெயை சேர்க்கவும்.பிறகு இதில் மீதமுள்ள நீரை (1 லிட்டர்) சேர்த்து நன்கு கலக்கவும்.தயாரான இந்த கரைசலை ஸ்பிரேயரில் ஊற்றி, பயிர்களின் இலைகள், கொடி, தண்டு போன்ற பகுதிகளில் தெளிக்கவும். இது வெள்ளை ஈ ,பச்சை புழு, அசுவினி, இலை பேன், மாவு பூச்சி, வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளைப் கட்டுப்படுத்துகிறது என்றார்.