Close
ஏப்ரல் 24, 2025 12:32 காலை

சிவகங்கையில் அரசு புகைப்படக் கண்காட்சி: திரளான மக்கள் பார்வை..!

புகைப்பட கண்காட்சியை பார்த்து ரசித்த மக்கள்

சிவகங்கை.

சிவகங்கை மாவட்டம்,எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட கே.உரத்துபட்டி கிராமத்தில்,செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.உரத்துபட்டி கிராமத்தில் இன்றையதினம் (23.04.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன.

மேலும், இக்கண்காட்சியில் அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது, யாரை அணுகி பெறவேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு அலுவலர்களால் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், நலத்திட்ட உதவிகளை யாரை அணுகிப் பெறவேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்வதற்கும் வசதியாக இப்புகைப்படக் கண்காட்சி பெரிதும் உதவியாக இருந்தது என பொதுமக்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

இதுபோன்று, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அரசின் சார்பில் நடத்தப்படும் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பார்த்து, அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டு பயன்பெறவேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top