Close
ஏப்ரல் 24, 2025 12:29 காலை

நரிக்குடி அருகே வீடில்லாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு..!

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீட்டிற்கான பணி ஆணியை மாற்றுத்திறனாளி முதியவருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

திருச்சுழி :

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நரிக்குடி ஒன்றியம் நல்லுக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் தனுஷ்கோடி. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி ஆண் மற்றும் பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

சில வருடங்களுக்கு முன்பு மனைவி உயிரிழந்த நிலையில் தனது மகளை தஞ்சாவூரில் திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவரது மகனும் தஞ்சாவூரில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வரும் நிலையில் இவர் மட்டும் நல்லுக்குறிச்சி கிராமத்தில் முற்றிலும் சிதில மடைந்த குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் வீடு முழு வதும் சேதமானதால் ஏழ்மை யான நிலையில் குடியிருக்க வீடின்றி ஊர் கலை யரங்கத்தில் தங்கி சமையல் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் முதியவரின் நிலையை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்ன ரசுவின் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் கடந்த முறை அப்பகுதியில் ஆய்வுப் பணிகளுக்காக சென்ற அமைச்சர் தங்கம்தென்னரசு அவ்வழியாக செல்லும்போது அந்த குடிசை வீட்டை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். அப்போது மீண்டும் பொதுமக்கள் முதியவருக்கு வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

உடனடியாக நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலரை அழைத்து முதியவருக்கு வீடு வழங்க உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு நிதி யமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டு வதற்கான உத்தரவு ஆணை யினை வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி முதியோ ரான தனுஷ் கோடியிடம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

தனக்கு செய்த உதவிக்கு நன்றி யினை கூற வார்த்தை களின்றி ஆனந்த கண்ணீர் மல்க அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு நன்றி யினை தெரிவித்த நெகிழ்ச்சி யான சம்பவம் அங்கிருந்த அமைச்சர் உள்பட அனை வரையும் கண்கலங்க வைத்தது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top